தூத்துக்குடியில் போஸ்கோ வழக்கு தீர்ப்புக்கு பயந்து விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள் மகன் தடிகாரன் (எ) கரும்பன் (62). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர் மீது தூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் போஸ்கோ வழக்கு நிலுவையில் இருந்து உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு இன்று தூத்துக்குடி போஸ்கோ நீதிமன்றத்தில் வர இருந்தது.
இந்த நிலையில் கரும்பன் தனது வீட்டின் அருகில் உள்ள கொய்யாமரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


