
கோவில்பட்டியில் இஎம்ஏஆர் ரத்ததான கழகம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இ.எம்.ஏ.ஆர் ரத்ததான கழகம் மற்றும் நெல்லை வாசன் கண் மருத்துவமனை சார்பில் இஎம்ஏ ராமச்சந்திரன் நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம், தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. முகாமினை இ.எம்.ஏ.ஆர். ஜவுளி நிறுவனத்தின் மேலாளர் சங்கத் துவக்கி வைத்தார். வாசன் ஐ கேர் மருத்துவமனை மருத்துவர் ஜெயசீல கஸ்தூரி தலைமையில் கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
முகாமில் ஜவுளி கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, கண் பரிசோதனை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, லென்ஸ் பொருத்துதல் போன்ற கண் பிரச்சனைகள் தொடர்பாக பரிசோதனை செய்து கொண்டனர். நிகழ்ச்சியில் வாசன் ஐ கேர் மார்க்கெட்டிங் மேலாளர் சூர்யா, இஎம்ஏஆர் ஜவுளி நிறுவன ஊழியர்கள் தங்கராஜ் சங்கிலி, பாண்டி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.