தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சக்கம்மாள்புரம், சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜெயமுருகன். இவரது மனைவி ராமகனி (51). இவர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர். நேற்று இரவு வந்து பார்த்தபோது வீட்டில் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராமகனி, ஏரல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிந்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.


