ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரசுவாமிகள் தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையம் தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள குமர குருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடிக்கல்வி மையம் தொடக்கவிழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன் தலைமை வகித்தார். எஸ்.எஸ்.ஏ. மேற்பார்வையாளர் பெருமாள், தலைமை ஆசிரியர் முத்துசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பள்ளியின் முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற காவல் துறை தலைவருமான மாசானமுத்து மையத்தினை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி மேலாண்மைக்குழு பிரதிநிதி, ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கத்தலைவர் காளியப்பன், மக்கள் நலச்சங்க சந்துரு, மற்றும் ஊர் பெரியவர்கள் கலந்துக் கொண்டனர்.
கலந்து கொண்ட குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராணி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


