சுப்பிரமணியம் சீனிவாசன் ( எஸ். எஸ். வாசன் ) சனவரி 4, 1903 – ஆகத்து 26, 1969) என்று அறியப்படுபவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார் . இவர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பிறந்தார். 1926-இல் பூதூர் வைத்தியநாதய்யர் என்பவரால் தொடங்கப்பட்ட ‘ஆனந்த விகடன் ‘ என்ற இதழை, 1928-ல் விலைக்கு வாங்கினார். ஆனந்த விகடன் இதழுக்கு எஸ் எஸ் வாசனே ஆசிரியராக இருந்து நடத்த ஆரம்பித்தார். அன்று தொடங்கி 90 ஆண்டுகளாக ஆனந்த விகடன் இதழ் வெளியாகி வருகிறது. ஜெமினி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர். 1964 முதல் அவரது இறப்பு வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
1948-ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா என்ற புகழ்பெற்ற திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே. அவர் மறைந்த 1969ஆம் ஆண்டு அவருக்கு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.