கருங்குளம் பகுதியில் வெள்ளத்தினால் வயல்வெளிகள் மழையில் முழ்கியது. இதனால் பயிர் சேதம் ஏற்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு வயல்வெளிகளிலும் விவசாயிகள் பயன்படுத்திய மின் மோட்டார் பழுதனாது. இந்த மோட்டார்களை இலவசமாக பழுது பார்த்து தருவதற்கு கோவை குமரகுரபரர் கல்லூரி ஏற்பாடு செய்தனர். இதற்காக ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா தலைமையில் பல குழுவினர் தாமிரபரணி கரைக்கு வந்துள்ளனர். இவர்களில் செய்துங்கநல்லூர், கருங்குளம், கால்வாய் பகுதியில் ஆய்வு செய்தனர். இவர்கள் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுடன் செய்துங்கநல்லூரில் ஆலோசனை நடத்தினர். அதன் பின் வயல்வெளிக்குள் இறங்கி சென்று அங்கு பழுதாகி கிடக்கு மோட்டார்களை விவசாயிகளுடன் ஆய்வு செய்தனர். கருங்குளத்தில் விவசாயி சுந்தர்ராஜ், கால்வாய் விவசாய சங்க தலைவர் எம்.எஸ்.பரமசிவன் ஆகியோரை சந்தித்து பேசினர். இவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துங்கநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி சிவகுருநாதன் உள்பட பலர் செய்தனர். இந்த குழுவில் மின்சாதன துறை பேராசிரியர் டாக்டர் காளியப்பன், டாக்டர் பிரகாஷ், விவசாய கல்லூரி உதவிபேராசிரியர் சாந்தனா மற்றும் மாணவர்கள் உடன் வந்தனர். தற்போது ஆய்வு செய்து அறிக்கையை கல்லூரியில் தாக்கல் செய்து, அதன் பின் விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை கல்லூரி நிர்வாகத்தினை செய்ய உள்ளனர்.


