கருங்குளம் ஒன்றியம் நாணல்காடு தாமிரபரணி ஆற்றுவெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்த ஊரில் உள்ள அரியமுத்து என்பவர் வீடு இடிந்து விழுந்தது. மேலும் பலர் உடமைகளை இழந்து தவித்தனர். இவர்களுக்கு ஆறுதல் கூற தாமிரபரணி ரோட்டரி கிளப்பை சேர்ந்த ஆறுமுக பாண்டியன், மருத்துவர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் நாணல்காடு வந்தனர். அவர்களை பஞ்சாயத்து தலைவர் இசக்கி முத்து வரவேற்றார். அதன் பின் அவர்கள் உடமை இழந்தவர்களுக்கு நிவாரணமும், வீடு இழந்தவருக்கு ரூ10 ஆயிரம் பணமும் வழங்கினார்கள்.


