டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கண்ணியமான வாழ்க்கையை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
03.12.23 உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளை ஒட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தடையற்ற சூழல், கண்ணியமான வாழ்க்கையை ஒன்றிய, மாநில அரசுகள் செய்து கொடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்துங்கநல்லூரில் அண்ணாசிலை அருகில் நடைபெற்றது.
கருங்குளம் ஒன்றியகுழு உறுப்பினர் சுந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மாவட்டதுணை தலைவர் கண்ணன் ஆர்பாட்டத்தை விளக்கிபேசினார். சந்தனகுமார் சிதம்பரம் பங்காருபாலகன் பேச்சிமுத்து மற்றும்பலர்கலந்து கொண்டனர்.


