தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் “ஆரோக்கியமான இந்தியா” வார விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் “ஆரோக்கியமான இந்தியா வாரம், 2023” என்ற குறிக்கோளுக்குட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த 27.11.2023 முதல் 01.12.2023 வரை நடத்தப்பட்டது. இதன்முகத்தான் கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் குறிப்பாக கட்டுரைப் போட்டி, யோகா போட்டிகள், சுவரொட்டி தயாரிப்பு போட்டி, வேடிக்கை விளையாட்டுகள், கைப்பந்து போட்டி, கூடைப்பந்து போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்வில் கல்லூரியின் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதிகட்டமாக நடைபெற்ற நிறைவு விழாவில் கல்லூரியின் அனைத்து ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு “ஆரோக்கிய இந்தியா-2023” என்ற குறிக்கோளுக்குட்பட்ட உறுதிமொழியினை அளித்தனர்.
கல்லூரியின் முதல்வர் அகிலன் நிறைவு விழாவில் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழினையும், பரிசுகளையும் வழங்கி ஊக்குவித்தார். இந்நிகழ்ச்சியினை விளையாட்டு செயலாளர் க.சே. விஜய் அமிர்தராஜ், உடற்கல்வி இயக்குநர் நடராஜன் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.


