தென்காசி மாவட்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பண்ணை பள்ளி திட்டத்தினை ரிலையன்ஸ் அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது. உளுந்து மற்றும் மக்காசோளம் பயிரிடப்படும் வட்டாரங்களில் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் நிலத்தை பண்படுத்துதல், உரமேலாண்மை, நீர்மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை குறித்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒருசில ஆண்டுகளாக மக்காச்சோளத்தில் படைப்புழுவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதனால் விவசாயிகள் அதிகமான இழப்பை சந்தித்து வருகிறார்கள். தற்போது உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒருங்கிணைந்த முறையில் மக்காச்சோளம் சாகுபடி செய்து படைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். தற்போது ராபி பருவத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு டயல் அவுட் கான்பெரென்ஸ் மூலம் ஒருங்கிணைந்த முறையில் படைப்புழுவை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் அருண்ராஜ் விதை, தேர்வு, விதை நேர்த்தி, நிலத்தை பண்படுத்துதல்.அடியுரம் இடுதல், வரப்பு பயிரின் முக்கியத்துவம், பயிரின் இடைவெளி போன்றவை குறித்து விளக்கி கூறினார். இதில் தியாகராஜபுரம், சிதம்பராபுரம் மற்றும் வேப்பன்குளம் கிராமங்களை சார்ந்த 40 க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் செய்திருந்தனர்.


