தூத்துக்குடி ஸ்பிக்நகர் சாகர்சதன் அலுவலகத்தில் லயன்ஸ் கிளப் சார்பாக 9 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
லயன்ஸ் கிளப் உலகம் முழுவதும் உள்ள 220 நாடுகளில் 14 லட்சம் உறுப்பினர்களுடன் அடித்தட்டு மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்பிக் லைன்ஸ் கிளப்பில் ஆளுநர் வருகையை முன்னிட்டு இன்று பல்வேறு நலத்திட்ட பணிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி தூத்துக்குடி ஸ்பிக்நகர் சாகர்சதன் அலவலகத்தில் வைத்து நடந்தது. குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி, குடிநீர் தொட்டி அமைத்து கொடுப்பது, முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநல காப்பகங்கள் போன்ற இடங்களுக்கு சென்று அங்கு உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, கழிப்பறைகள், தண்ணீர் தொட்டிகள் அமைத்து கொடுத்தல், மரம் நடுதல் உள்ளிட்ட சுமார் 9 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து கொடுத்துள்ளனர்.
இந்த ஆண்டின் லயன்ஸ் கிளப்பின் கவர்னர் என்.கே.விஸ்வநாதன் ஸ்பிக் லயன்ஸ் கிளப்பின் அறிக்கைகளை தணிக்கை செய்தார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகளில் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஸ்பிக் லயன்ஸ் கிளப் 1974 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு 50 ஆவது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை மிகுந்த அர்ப்பணிப்போடு செய்து வந்துள்ளது. 324 கி மாவட்டம் என்பது தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, நாகர்கோவில், விருதுநகர் என்று ஆறு வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியதுதான் லயன்ஸ் மாவட்டமாகும். உலகில் எங்கெல்லாம் இயற்கை சீற்றத்தால் பாதிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் லயன்ஸ் கிளப்பின் அங்கமான லயன்ஸ் பவுண்டேஷன் மூலமாக உடனடியாக அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றோம். உதாரணமாக சுனாமி பாதிப்பின் பொழுது கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 51 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. அதேபோன்று விருதுநகர் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளது. லயன்ஸ் கிளிப்பின் தாரக மந்திரமே தொண்டும் தோழமையும் என்பதுதான். குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் உலக அமைதிக்காக என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தி வருகின்றோம் இன்றைய காலகட்டத்தில் உலகமே வன்முறை களமாக இருந்து வருகின்றது. இதனை வரும் தலைமுறையினர் புரிந்து கொள்ளும் விதமாக குழந்தைகளிடமிருந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அவர்கள் மனதில் உலக அமைதி பற்றிய எண்ணத்தை எர்ப்படுத்தைடவே இந்த ஓவிய போட்டியை லயன்ஸ் நடத்தி வருகிறது.
மேலும் உலகம் முழுவதும் தற்பொழுது 5 முக்கிய தேவைகளை கருத்தில் கொண்டு லயன்ஸ் செயல்பட்டு வருகிறது. முதலாவதாக தற்பொழுது குழந்தைகளுக்கு புற்றுநோய் அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்காக பள்ளிகள் தோறும் சென்று புற்றுநோய் முகாம்கள் நடத்தி பாதிக்கப்பட்ட குழந்தைகளைகண்டறிந்து உடனடியாக அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரங்களை நடபட்டு வருகிறது. தற்பொழுது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தி வரக்கூடிய சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி மருத்துவ உதவியும் செய்து வருகின்றோம். அடுத்ததாக கண்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் விதமாக கண் தானத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். கண் நோய் பற்றிய மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றோம். ஒருவர் கண் தானம் செய்தால் நவீன மருத்துவம் மூலமாக நான்கு பேர் பார்வை பெற முடியும் என்பதை உணரச் செய்து வருகின்றோம். மேலும் இந்த ஆண்டு பசிக்கு உணவு என்ற புதிய திட்டத்தை துவங்கி அதன் மூலமாக தினம் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகின்றோம் என்றார்.
இந்நிகழ்ச்சியின் போது முதல் பெண் லயனான கலையரசி விஸ்வநாதன் மற்றும் ஸ்பீக் லயன்ஸ் கிளப்பின் தலைவர் லட்சுமணன் செயலாளர் காசி பொருளாளர் லோகு மணி உள்ளிட்ட லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


