ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் நல்லாசிரியர்_விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு #நல்லாசிரியர்_விருதுக்கு திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி நகர் சரகத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி நகர், மாதா நடுத்தெரு, இந்து நடுநிலைப்பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும்
சங்கரன் தமிழகத்தின் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஆசிரியர் பணியில் சிறப்பாக பணியாற்றியதற்கு,
விருது பெற்றிருப்பது, மற்ற ஆசிரியர்களுக்கும் ஒரு உந்து சக்தியாக அமையும் என்றால் அது மிகையாகாது.


