தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் திருமூலநாதர் என்னும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையானது. இந்த கோவில் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. எனவே இந்த கோவிலை புணரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வல்லநாடு திருமூலநாதர் கோவில் சீரமைப்பு பணிக்காக 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் இந்த கோவிலுக்காக தன்னார்வலர்கள் இணைந்து 2 கோடி ரூபாய் செலவு செய்ய முன் வந்துள்ளனர். எனவே 3 கோடி ரூபாய் செலவில் கோவில் சீரமைப்பு பணி தொடங்க உள்ளது. இதற்காக முதல் கட்டமாக ஒன்றரை கோடி மதிப்பில் புதிய கொடிமரம், புதிய தேர் செய்யவும், 700 மீட்டரில் சுற்றுசுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள ஒன்றரை கோடி ரூபாய் கொண்டு கோவில் பணிகளை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் வல்லநாடு திருமூலநாதர் திருக்கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்கி வைக்க மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வருகை தந்தார். அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பாலாஜி சரவணன் ஆகியோர் வந்தனர். அவர்களை கோவில் பக்தர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அவர்கள் சிவனையும், அம்பாளையும் தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் முன்பு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ஆர்டிஓ சுப்பிரமணியன், வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், பிடிஓ செல்வி, பாக்கியலீலா, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி, பாரதி பள்ளி தாளாளர் சங்கரலிங்கம், வட வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் பேபி சங்கர், நங்கமுத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.


