தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முறப்பநாடு காவல்துறையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முறப்பநாடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருவேங்கடபுரத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவரை போலிசார் பிடித்து விசாரணை செய்ததலில் அவர் கீழச்செக்காரக்குடி கிழக்குத் தெருவைச் சேர்ந்த குமாரசாமி மகன் கருப்பசாமி என்பதும், அவர் அந்த பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. உடனே போலிசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


