தூத்துக்குடியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய முதலாவது மாவட்ட வாழ்விட வளர்ச்சி குழு கூட்டம் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய முதலாவது மாவட்ட வாழ்விட வளர்ச்சி குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் சிவகிருஷ்ண மூர்த்தி, தலைமை பொறியாளர் சண்முக சுந்தரம், நிர்வாக பொறியாளர் திருநெல்வேலி கோட்டம் சாந்தி, உதவி நிர்வாகப் பொறியாளர் இராஜா கொம்பையா பாண்டியன், இளநிலை பொறியாளர் மணிகண்டன், தூத்துக்குடி மாவட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டப்பட்ட மற்றும் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடியிருப்பில் அடிப்படை வசதிகளை உருவாக்க பிற துறைகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி பணிகளை துரிதமாக முடிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதைத் தவிர புதிய நிலங்கள் கண்டறியப்பட்டு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் குடும்பங்களை மறு குடியமர்வு செய்வதற்கும் ஆலோசிக்கப்பட்டது.
ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் நீர் நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை மறு குடியமர்வு செய்வதற்கும் ஆலோசிக்கப்பட்டது. ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் நீர் நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை மறு குடியமர்வு செய்வத்றகும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே குடியமர்வு செய்யப்பட்ட திட்டப்பகுதிகளில் குடியிருப்போர் நல சங்கம் ஏற்படுத்தி பராமரிப்பு பணிகளில் அரசின் பங்களிப்பை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.


