தேசிய மாணவர் படை பயிற்சியில் தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளி அதிகாரிக்கு எஸ்பி பாலாஜி சரவணன் வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த 01.03.2022 முதல் 30.03.2022 வரை மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள தேசிய மாணவர் படை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் தேசிய மாணவர் படை அதிகாரிகளுக்கான பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி அகாடமியில் தமிழகத்தைச் சேர்ந்த 15 பேர் உட்பட அனைத்து மாநிலங்களிலிருந்தும் மொத்தம் 112 பேர் கலந்து கொண்டனர்.
இதில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை பெண் அதிகாரி லோலிடா ஜுடு என்பவர் கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்படி பெண் அதிகாரியை சால்வை அனிவித்து பாராட்டினார்.


