தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பொதுப்பணித் துறையின் பராமரிப்பின் கீழ் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் சீர்செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ள பள்ளிகள், நீதிமன்ற கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடங்களாக சுமார் 3200 உள்ளன.
இதில் 1400 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இதனைத் தொடர்ந்து, பிறத்துறை கட்டிடங்கள், பள்ளிகள், நீதிமன்ற கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு மாணவ, மாணவியர் விடுதிகளில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் இந்த நிதியாண்டில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மாவட்டம் முழுவதும் சீர்செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


