இரத்தினம் பிள்ளை என்ற சுவாமி நாதன் 1907 டிசம்பரில் பிறந்தவர். அவரது தகப்பனார் இரத்தின சபாபதி. தாயார் சுந்தரி அம்மாள். இவரது தந்தை நாடக ஆசிரியர். மரபு வழியாக வைத்தியம் செய்வதைத் தொழிலாகக் கொண்டவர். வீரவாஞ்சிநாதன் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆஷ்துரையை கொன்று விட்டு தீவிரமடைந்த விடுதலை வேள்வியில் இரத்தினம் பிள்ளை தன்னை அர்ப்பணித்து க்கொண்டார். திருவைகுண்டம் வட்டாரத்தில் விடுதலை இயக்கச் சிந்தனைக்கு வித்திட்டவர். தனி நபராக , அந்தக் காலத்து மெக்கபோன் கருவி மற்றும் தம்புராவின் மூலம் இரவு பகலாக பிரச்சாரங்கள் மேற்கொண்டுள்ளார். உப்பு சத்தியாக்கிரகம் (1930) அந்நியத்துணிப் புறக்கணிப்புப்போராட்டம், தனி நபர் சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவற்றில் கலந்து கொண்டுள்ளார். 1932 ல் வெள்ளூர் சின்னத்தம்பித் தேவர் எஸ்.டி. ஆதித்தன் என். பொன்னையப்ப பிள்ளை ஆகியருடன் இணைந்து கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுள்ளார். 2 மாதம் 10 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார். நமது தாயின் நகைகளை போராட்டக்காலத்தில் பயன்படுதியவர். கோவில் பட்டி தாலூகா கடலையூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துக்கொண்டார். அப்போதைய காவல் துறை உயர் அதிகாரி தாமோதரன் என்பரால் செருப்புக் காலால் அடிவயிற்றில் மிதிக்கப்பட்டு ,அதனால் குடல் இறக்கம் ஏற்பட்டு அவதிப்பட்டார்.
இவரை மதுரை சிறைக்கும் வெயிலுக்கந்த முதலியார் என்பவரை அலிப்புரம் (மேற்கு வங்கம் ) சிறைக்கும் அனுப்பி வைத்தனர். 1942 முதல் 1943 வரை அரசு குற்றவாளியாகத் தேடிய போது, திருவிதாங்கூர் மகாராசா பாதுகாப்பில் இருந்தவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தேசிய ராணுவத்திற்கு உண்டியல் வசூல் செய்து அனுப்பியுள்ளார். சுதந்திரப்போராட்ட பிற தியாகிகளான எஸ்.டி. ஆதித்தன், செந்திப்பெருமாள்தேவர், சின்னத்தம்பிதேவர், சோமயாஜுலு, திருவேங்கடம் பிள்ளை, விட்டிலாபுரம் வெங்கடாச்சாரி, காமராஜர், பக்தவச்சலம் போன்றவர்களுடன் தொடர்பு கெண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். விடுதலைக்குப் பின் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய நினைவுதினங்களைத் தானே தனியாக நின்று தேசியக் கொடியைக் கையில் ஏந்தி , வீதி களில் வலம் வந்து வந்தே மாதரம் முழங்கி சின்னஞ்சிறார்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்வித்ததை திருவைகுண்ட வாசிகள் பெரும்பாலோர் இவரை நினைவு கூறுகிறார்கள். நாட்டு விடுதலைக்காகத் தனது திருமணத்தை தள்ளிப்போட்டார்.
விடுதலைக்குப் பின் 1948 ஆம் வருடம் அவர் திருமணம் செய்துக் கொண்டார். காந்தி முறையில் கதர் ஆடையுடன் எளி ய வகையில் திருமணம் நடந்தது . ஏக்கர் நிலமான்யம் இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அரசு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. திருவைகுண்டம் பஞ்சாயத்து அலுவலகத்தின் கடைநிலை ஊழியராகப் பணியாற்றியுள்ளார். இவருக்கு மூன்றுபுதல்வர்கள் இருக்கிறார்கள். தியாகி இரத்தினம் பிள்ளை, வெள்ளூர் சின்னத்தம்பித் தேவருடன் இணைந்து விடுதலை இயக்கத்தில் பணியாற்றி காலத்தில் அவர்களின் உறவு தந்தை தாயின் உறவு முறை போலவே திகழ்ந்திருக்கிறது. வழக்கறிஞர் சின்னத்தம்பித்தேவர் இவரைத் தன் சொந்த மகனாகவே கருதி கட்டளையிட்டு வந்துள்ளார் . சின்னத்தம்பித் தேவர் அமரர் ஆன போது ஒரு தந்தை மகன் எப்படிக்கருமம் செய்வாரோ அதுபோல அவரது பிள்ளைகளோடு சேர்ந்து கருமம் செய்து மொட்டையடித்துக்கொண்டார் என்பதை நினைக்கும்போது சமூக நல்லிணக்கத்துக்கு இதை விட மேலான உதாரணம் காண இயலாது.


