தூத்துக்குடி அருள்மிகு பாகம்பரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் ஆலய சித்திரை திருவிழா தேரோட்டம் விழா கடந்த வாரம் கொடியேற்றுத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்வு இன்று விமர்சையாக நடைபெற்றது இதில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் வடம் பிடித்து தேரொட்டத்தை தொடங்கி வைத்தார்.


