பே.சிதம்பரமணிகண்டன்
செய்தியாளர்
ஸ்ரீவைகுண்டம் & திருச்செந்தூர்
7708743095
03.05.23 TUT – BUS DEPO RAIN WATER ISSUE NEWS
“நிம்மதியா தூங்க முடியல” – அரசு பேருந்து பணிமனை ஓய்வறையில் மழைநீர் சூழ்ந்ததால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் ஓய்வு எடுக்க முடியாமல் அவதி…!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு பேருந்து பணிமனையில் 8 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பேருந்து பணிமனையில் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்குவதற்கு தனியாக ஓய்வு அறை உள்ளது. இந்த நிலையில் பேருந்து பணிமனை ஓய்வறையில் கனமழை காரணமாக நீர் ஒழுகியவாறு காணப்பட்டது. பின்னர் அந்த நீரானது வெளியே செல்வதற்கு வழி இல்லாமல் ஓய்வறை முழுவதும் மழை நீர் கெட்டி கிடந்தது. இதனால் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் ஓய்வு எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


