தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது – திருடப்பட்ட ரூபாய் 12,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மீட்பு.
திருச்செந்தூர் பரமன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த குருத்து மகன் ஜெயராஜ் (54) என்பவர் நேற்று (02.05.2023) தனது இருசக்கர வாகனத்தை திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் அருகில் நிறுத்திச் சென்றுள்ளார். பின்னர் வந்து பார்க்கும்போது அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது.
இதுகுறித்து ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து உதவி ஆய்வாளர் திரு. ராமச்சந்திரன் மற்றும் திருச்செந்தூர் உட்கோட்ட காவல் தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில், காயல்பட்டினம் உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஹசன் மகன் ஷேக் முகமது (39) என்பவர் மேற்படி ஜெயராஜின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி போலீசார் எதிரி ஷேக் முகமதுவை கைது செய்து, அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 12,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்


