தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 13.02.2023 அன்று தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ செக்கராக்குடி பகுதியை சேர்ந்த நயினார் மனைவி காந்திமதி (75) என்பவரை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் கீழ செக்கராக்குடி பகுதியை சேர்ந்தவர்களான பரமசிவன் மகன் சங்கர நயினார் (22) மற்றும் ஆறுமுக நயினார் மகன் நெல்லையப்பன் (22) ஆகியோரை தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
கடந்த 07.01.2022 அன்று குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரம் பகுதியை சேர்ந்த பெருமாள் (எ) காசி என்பவரது மனைவி நாகூராள் (85) என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துவிட்டு கொலை செய்தவழக்கில் குரும்பூர் அருள்நாதபுரம் பகுதியை சேர்ந்த நட்டார்முத்து மகன் பாலசுப்பிரமணியன் (எ) ராஜா (35) என்பவரை குரும்பூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேற்கண்ட வழக்குகளில் கைதான சங்கர நயினார், நெல்லையப்பன் மற்றும் பாலசுப்பிரமணியன் (எ) ராஜா ஆகிய 3 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


