தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு உருளை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.1167.0 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.1165.50 ஆகவும், கழுகுமலையில் ரூ.1174.00 ஆகவும், கயத்தாhறில் ரூ.1177.00 ஆகவும், எட்டையபுரத்தில் ரூ.1165.50 ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.1184.50 எனவும்,
பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.1167.00 ஆகவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.1167.00 எனவும், 01.03.2023 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 முப) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


