கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
கருங்குளம் வட்டாரம், வேளாண்மை உழவர்நலத்துறையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லு£ரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் கிள்ளிகுளம், வேளாண்மைக்கல்லு£ரி பொறுப்பு முதல்வர் எபனேசர் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) மனோரஞ்சிதம் கலந்து கொண்டு சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து கூறினார். தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ஜென்கின் பிரபாகர் கலந்து கொண்டு நெல் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் சாகுபடியில் குறித்து கூறினார்.
து£த்துக்குடி, வேளாண்மை துணை இயக்குநர் (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்) நாச்சியார் கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தின் முக்கியத்துவம் குறித்து கூறினார். கருங்குளம், வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வேளாண்மைத்துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.
கிள்ளிகுளம் கல்லு£ரியின் உழவியல் பேராசிரியர் ஜோசப் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து கூறினார். கிள்ளிகுளம் கல்லு£ரியின் பயிர் நோயியல் பேராசிரியர் ஷீலா பயிர்களை தாக்கும் நோய்கள் மற்றும் மேலாண்மை முறைகள் குறித்து கூறினார். கிள்ளிகுளம் கல்லு£ரியின் பூச்சியில் துறை இணை பேராசிரியர் ஆல்வின் பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் மேலாண்மை முறைகள் குறித்து கூறினார்.
து£த்துக்குடி, வேளாண்மை பொறியியல் துறை இளநிலை பொறியாளர் மரியபாக்கியம் துறை திட்டங்கள் குறித்து கூறினார். மேலும் கிள்ளிகுளம் கல்லு£ரியின் துணை மேலாளர் அஸ்வதி தொழில்முனைவோருக்கான மதிப்புக்கூட்டுதல் பயிற்சி மற்றும் இயந்திரங்களின் பயன்பாடு குறித்து கூறினார். கிள்ளிகுளம் கல்லு£ரியின் மண்ணியல் பேராசிரியர் மற்றும் தலைவர் ஜோதிமணி மண்வள அட்டை பயன்பாடு முக்கியத்துவம் குறித்து கூறினார்.
கிள்ளிகுளம் கல்லு£ரியின் நுண்ணுயிரியல் ஜெபர்லின் பிரபீனா மண்புழு உரம் துறை பேராசிரியர் தயாரிக்கும் முறை மற்றும் செயல்விளக்கத்துடன் கூறினார். நிகழ்ச்சிக்கு கருங்குளம் மற்றும் திருவைகுண்டம் வட்டார விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜலெட்சுமி, இசக்கிராணி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முத்துசங்கரி, ஆனந்தி, அசோக் அய்யாச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.


