விவசாயிகளுக்கு மண் மாதிரி குறித்த பயிற்சி நடந்தது.
கருங்குளம் வட்டார வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் ஆழ்வார்கற்குளம், வல்லக்குளம் மற்றும் தெய்வசெயல்புரம் கிராமங்களில் விவசாயிகளுக்கு மண் வள அட்டை திட்டம் பயிற்சி நடந்தது.
பயிற்சியில் கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தில் பசுந்தாள் உரபயிர்கள் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்கிட எடுத்துரைத்தார். வாகைக்குளம் வேளாண் அறிவியல் மைய உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் முருகன் உயிர் உர பயன்பாடு மற்றும் மண் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
கோவில்பட்டி மண் பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் கனகராஜ் விவசாயிகள் அனைவரும் தங்கள் நிலங்களில் மண் மாதிரி செய்து அதன்படி பயிர் சாகுபடி செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார். கோவில்பட்டி மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் செல்வமாலதி மாதிரி எடுக்கும் விதம் குறித்து விவசாயிகளிடையே எடுத்துரைத்தார்.
பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளை கிள்ளிக்குளம் வேளான்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்து சென்று மண்மாதிரி எடுக்கும் முறை குறித்தும், மண் ஆய்வகத்தில் பரிசோதனை முறைகள், மேலும் உயிர்உர ஆய்வகங்களின் செயல்பாடுகள் குறித்து குறித்து மண்ணியியல் தும் உதவி பேராசிரியர் மணிகண்டன் செயல்விளக்கமாக எடுத்து கூறினார்.
பயிற்சியில் கருங்குளம் வட்டார வோராமை அலுவலர் காயத்ரி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன் உடனிருந்தனர். பயிற்சியில் 90 விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் வட்டார உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேஷ், ரகுநாத், திருவேணி ஆகியோர் செய்திருந்தனர்.