தூத்துக்குடி மாவட்டத்தில் பின்தங்கிய மற்றும் பாதிப்படைந்துள்ள பெண்களுக்கான சிறப்பான சேவை புரிபவர்களை அங்கீகரிக்கும் விதமாக “நாரி சக்தி புரஸ்கார் விருது” என்னும் பெண்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது.
குழந்தைகள் பாகுபாடு, துன்புறுத்துதல், பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில் தலைசிறந்த பங்களிப்பு, சேவை புரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான சேவை புரியும் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படும் “நாரிசக்திபுரஸ்கார்விருது” என்னும் தேசிய விருது பெற தகுதி வாய்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது கருத்துருவை www.awards.gov.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்