
பெருங்குளத்தில் வேட்புமனு தாக்கல் சம்மந்தமான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு.
வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடந்த 28.01.2022 அன்று முதல் 04.02.2022 வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பெருங்குளம் பகுதிகளில் நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கல் சம்பந்தமாக போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரிஜெமிதா, உதவி ஆய்வாளர் ராஜாமணி உட்பட காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.