தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை, நல்லமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராஜ். இவரது மனைவி சுனிதா (29). இந்த தம்பதியருக்கு வானிஸ்ரீ (3) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 1ம் தேதி சுனிதா மகளுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் திரும்பி வரவில்லை. இதையடுத்து விஜயராஜ் பல இடங்களில் தேடியும் அவர்களைப் பற்றிய தகவல் தெரியவில்லை.
இதுகுறித்து அவர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பவுல் லோஸ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.