கயத்தாறு அருகே கனிம வளங்களை ஏற்றி வந்த டாரஸ் லாரி சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி சாய்ந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே செட்டிகுறிச்சி பஞ்சாயத்து, தெற்கு கோனார் கோட்டை புதூரில் 40டன் எடைகொண்ட கனிம வளங்களை ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி ஒன்று கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழி முறையாக மூடுப்படாத நிலையில் லாரி அந்த பள்ளத்தில் பதிந்து சாய்ந்த நிலையில் நின்றது.
லாரி முழுமையாக சாய்ந்தால் அருகில் உள்ள வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் அதிஷ்டவசமாக லாரி சாயாமல் நின்றதால் அப்பகுதி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுபோல் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளை கனிம வளத்துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


