விளாத்திகுளத்தில் யோகி ராம் சுரத்குமாரின், 107வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ள யோகி ராம் சுரத்குமார் நாமகேந்திரத்தில் சுரத்குமாரின் 107-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு 10-வது ஆண்டாக யோகி ஜெயந்தி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, விசிறி விநாயகருக்கு பூஜை, ஸ்ரீமஹாகணபதி, ஹோமம் ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது.
அதிகாலையில் சிறப்பு யாகசாலை மற்றும் பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நண்பகல் 1 மணி அளவில் யோகி ராம் சுரத்குமாருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சமுக தீபாரணை நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


