செய்துங்கநல்லூர் அருகில் உள்ள நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகில் உள்ள நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பில் திருக்குறள் ஒப்பித்த மாணவர்கள் மூலம் மரக்கன்றுகள் மரம் நடும் விழா நடைபெற்றது. முன்னதாக திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பில் ஐந்தாவது பயிலரங்க கூட்டம் நடந்தது.
திருக்குறள் கண்காணிப்புக்குழு உறுப்பினர் மற்றும் பயிலரங்க குழுத் தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் ரகுமத்துல்லா தொடக்க உரையாற்றினார். ஆசிரியை ஜெபஸ்லின் வரவேற்றார். தமிழக அரசின் சிறந்த திருநங்கை விருதாளர் பொன்னி திருக்குறள் கூறும் நற்பண்புகள் குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் பதிலளித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் கே.ஆர்.பி. மணிமொழிசெல்வன், கிராம உதயம் பகுதி அலுவலர் ஆனந்தன், செல்வன் , ஆசிரியை டெமி அருள்டா, ஆசிரியை மகாலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை பானுமதி நன்றி கூறினார். தொடர்ந்து திருக்குறள் ஒப்பித்த மாணவர்கள் சார்பில் பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்று மற்றும் பனை விதைகள் விதைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மேல ஆழ்வார்தோப்பு கிராமஉதயம் தொண்டு நிறுவனம் செய்திருந்தது.


