தூத்துக்குடியில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலை மற்றும் உருவ படத்திற்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டது.
1930 ம் ஆண்டு உப்புக்கு வரி விதிக்கும் ஆங்கில அரசின் சட்டத்தை அறவழியில் எதிர்த்து உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடத்தி வெற்றியை தேடித்தந்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கத்தில் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டது. இதில், சங்கத்தின் தலைவர் எஸ்எம்எஸ் பொன்பாண்டியன், செயலாளர் எம்எஸ்வி தேன்ராஜ், தணிக்கையாளர் விஜயராகவன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திமுக சாா்பில்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மகாத்மா காந்தியின் 158வது பிறந்த தினத்தை முன்னிட்டும் பெருந்தலைவர் காமராஜாின் 51வது நினைவு தினத்தை முன்னிட்டும் வடக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின் தலைமையில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவா்களது திருவுருவச் சிலைக்கும் பின்னா் வஉசி மாா்க்கெட் அருகில் உள்ள காமராஜா் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தாா்கள்.நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநில பொறியாளரணி துணைச்செயலாளர் அன்பழகன், மண்டல தலைவர் கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பார் குபோ் இளம்பாிதி, மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், தகவல் தொழில்நுட்ப துைண அமைப்பாளர் அருணாதேவி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், மாநகர வா்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகா் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


