தூத்துக்குடியில் வணிகர் சங்கத்தினர் கடைகடையாகச் சென்று ஜிபே, போன்பே போன்ற கியூஆர் கோட் ஸ்டிக்கர்களை கிழித்து யூபிஐ கட்டண முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் 10,000-க்கும் மேற்பட்ட கடைகளில் ஒரு நாள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வணிகர் சங்கத்தினர் கடைகடையாகச் சென்று ஜிபே, போன்பே போன்ற கியூஆர் கோட் ஸ்டிக்கர்களை கிழித்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
யூபிஐ கட்டண முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி நகர வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் கடைகளில் ஒட்டப்பட்டிருந்த கூகுள் பே போன்பே உள்ளிட்ட கியூஆர் கோட் ஸ்டிக்கர்களைக் கிழித்து வணிகர்கள் அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவர் ஜே. ஜவகர் தலைமையில், செயலாளர் டாக்டர் சொ. ராஜா மற்றும் பொருளாளர் விக்னேஷ் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் இப்போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு நேரில் சென்று, கடைகளின் முன்பு ஒட்டப்பட்டிருந்த ஜிபே ஸ்டிக்கர்களை அவர்கள் கிழித்துத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட கடைகளில் இன்று ஒரு நாள் மட்டும் அடையாள வேலைநிறுத்தமாக ஜிபே, போன்பே மூலம் கட்டணங்களைப் பெறுவது முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்கள் வழக்கமான பணப்பரிவர்த்தனை மூலம் ரொக்கப் பணம் கொடுத்துப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.


