ஆறுமுகநேரியில் ஆன்மா அமைப்பின் 25ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆன்மா அமைப்பின் 25 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், ஆறுமுகநேரி, முக்காணி, சேர்ந்தபூமங்கலம், வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், திருச்செந்தூர், கொற்கை, ஏரல் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 460 பேருக்கு நோட்டுகள் 110 பேருக்கு சீருடை வழங்கப்பட்டது.
மேலும், 17 பேருக்கு கல்வி கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவ உதவி தொகை, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. மூன்று மாணவியருக்கு நீட் தேர்வு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன. விழாவில் ஆன்மா அமைப்பின் நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


