தூத்துக்குடி கோட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி வட்டத்தில் பணிபுரிந்து வரும் 15 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (விஏஓ) பொது இடமாறுதல் வழங்கி தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் மி.பிரபு உத்தரவிட்டுள்ளார்.

இடமாறுதல் உத்தரவு பெற்ற அனைவரும் ஜூன் 30-ஆம் தேதி பிற்பகலிலேயே விடுவிக்கப்பட்டு, ஜூலை 1-ஆம் தேதி முற்பகலில் தங்களது புதிய கிராமங்களில் பணியேற்க உத்தரவிடப்பட்டுள்ளது . இந்த ஆணையின் மீது எவ்வித மேல்முறையீடோ அல்லது கோரிக்கைகளோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும், தனியர்கள் பணியேற்ற விபரத்தை உடனே அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தூத்துக்குடி வட்டாட்சியருக்குக் கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்


