மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ். ஜே. கென்னடிக்கு “நம்மாழ்வார் விருதினை” நம்மாழ்வார் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சி மகேந்திரன் வழங்கி, பாராட்டி பேசினார்.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் மதர் சமூக சேவை அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஏழை எளிய ஆதரவற்ற விதவைப் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும், பனைத் தொழிலாளர்கள், மீனவர்கள், தலித் மக்களின் மேம்பாட்டுக்காகவும், சுகாதாரத்தை பேணி பாதுகாக்கவும் மேலும் சுற்றுச்சூழலை மேம்படுத்த ஒரு கோடி பனை விதை விதைக்கும் பணியிலும், ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணியிலும், விதை பந்துகள் விதைத்தல் போன்ற பணிகளை சமூக அக்கறையோடும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தொடர்ந்து சமூக அக்கறையோடு, சேவை மனப்பான்மையோடு , எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து சிறப்பாக சேவை செய்து வருகிறார். இவரது சேவையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் விதமாக நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பில் தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடந்த நம்மாழ்வார் திருவிழாவில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடியின் சிறந்த சேவையை பாராட்டி நம்மாழ்வார் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சி மகேந்திரன் நம்மாழ்வார் விருதினை டாக்டர் எஸ் ஜே கென்னடிக்கு வழங்கி அவரது சேவையை பாராட்டி, வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் கோவை சதாசிவம், பாமையன், வேளாண் செம்மல் கோ. சித்தர், சுப. உதயகுமார், ஆலங்குடி கணேசன், வி இறையழகன்,
அக்னி. தங்கவேலு, வி பி குணசேகரன் உட்பட பல சான்றோர்கள் கலந்து கொண்டனர். விருது பெற்ற டாக்டர் எஸ் ஜே கென்னடியை புதுக்கோட்டை சார்பு நீதிபதி வி. ராமலிங்கம், தாசில்தார் லெனின், கோபால், அங்கமங்கலம் பஞ்சாயத்து தலைவர் டாக்டர்.பா.பானுப்பிரியா பாலமுருகன், காயல் இயற்கை வளம் அமைப்பு செயலாளர் காயல். ஜாஹிர், காயல் சமூக நீதிப் பேரவை மாநில செயலாளர் முகமது சாஹிப், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி, சமூக ஆர்வலர் காயல். பாலா உள்பட விருது பெற்ற டாக்டர் எஸ் ஜே கென்னடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


