தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் (முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் கட்டிய தலைமைச் செயலகம்) சட்ட சபை அரங்கில் வைத்து தமிழ்நாடு மாநில சுகாதார பேரவை துவக்க விழா 30/03/2022 நடைபெற்றது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், மாநில சுகாதார பேரவை தலைவருமான மேன்மைக்குரிய மு க ஸ்டாலின் அவர்கள் தலைமை தாங்கி தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையை துவக்கி வைத்தார்கள். மாண்புமிகு அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதில் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் I A S, அவர்கள்,. செந்தில்குமார் I A S, அவர்கள், திட்ட இயக்குனர் உமா அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து டீன் நேரு அவர்கள், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் அவர்கள், DDHS.PA மதுரம் பிடைட்டன் அவர்கள், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், சமூக ஆர்வலருமான எஸ் ஜே கென்னடி அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் பேரவைக் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது


