தூத்துக்குடி காமராஜர் கல்லூரி உதவி பேராசிரியர் கா.அபிஷ் விக்னேஷ் எழுதிய அக்னியின் காந்தம் என்ற ரேடியோ நாடகம் நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி முதல் 4 மணி வரைஒலிபரப்பாகிறது. இந்த நாடகம் தமிழகத்தில் உள்ள(All India Radio) ஆல் இந்தியா ரேடியோவில் பாண்டிச்சேரி (All India Radio) வானொலியிலும் முதன்மை அலைவரிசையில் ஒலிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியினை இணைய வழி செயலியிலும் கேட்டு மகிழலாம். news on air app தரவிறக்கம் செய்து, அதில் வானொலி பகுதியை சொடுக்கி, எந்த வானொலி நிலைய நிகழ்ச்சியை கேட்கவேண்டுமோ அதையே நாம் தேர்ந்தெடுக்கவும் வசதி உள்ளது. முதன்மை அலைவரிசை – பிசி என குறிப்பிடப்பட்டிருக்கும். ரெயின்போ அலைவரிசை-எப்எம் என குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த நிகழ்ச்சியை நெல்லை எல். அழகிய நம்பி அமைத்துள்ளார். இந்த நாடகத்தில் அனுராணி, முத்துசுவாமி, கந்தன், ஹரிராம், புண்ணியகோடி, சுப்பிரமணியன், காளிமுத்து, ஜோனா ஆகியோர் நடித்துள்ளனர். நாடக அமைப்பில் ஜமீன் சின்னத்துரை உதவியுள்ளார்.


