
செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
இதில் சென்னை, நாமக்கல், ஏரல், கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களில் இருந்து தனியார் கம்பெனியை சேர்ந்தவர்கள் வருகை தந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு உதவி திட்ட அலுவலர் பிரியங்கா தலைமை வகித்தார். வட்டார இயக்க மேலாளர் மல்லிகா முன்னிலை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் வசந்தி, பேச்சித்தாய், சுடலி, பானுமதி, பாக்கியலெட்சுமி, கிரேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 212 பேர் கலந்து கொண்டனர். இதில் 52 பேர் தேர்வு செய்யப்பட்டு பணிக்கான ஆணையை கருங்குளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு சான்றிதழ் வழங்கினார்.