உலக ஈர நில நாளினை முன்னிட்டு இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் குளத்துப்பகுதியில் ஏராளமான பறவைகள் உள்ளது. எனவே இந்த பகுதியில் இன்றைய தினம் மாவட்ட வனத்துறை மற்றும் தனியார் அமைப்பு சார்பில் 60 பள்ளி மாணவ மாணவிகளை குளத்துப்பகுதிக்கு நேரடியாக அழைத்து வந்து களத்தில் ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் கலந்து கொண்டு இந்த போட்டிகளை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இந்த ஓவியப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் ஓவியப்படங்கள் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளில் ஓவியமாக வரையப்படும் என்று தெரிவித்தனர்.
அதன்பின்னர் வன அலுவலர் அபிஷேக் தோமர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தூத்துக்குடி மாவட்டத்தில் ஈரநில பரப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள தனி குழு அமைத்து பணிகள் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவில் ஈரநிலப்புகள் உள்ளது. இதுகுறித்து மக்களிடம் ஆர்வத்தை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் 6 பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவ மாணவிகளை கொண்டு ஈரநிலப்பகுதிகளில் உள்ள பறவைகள் மற்றும் இடங்களை ஓவியமாக வரைந்துள்ளனர். கடந்த 2 தினங்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பறவைகள் எண்ணிக்கை நடந்து வருகிறது. அதில் ஏராளமான பறவைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.