இந்த பயணிகள் நிழற்குடையானது முழுவதும் சேதம் அடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த பகுதி மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் பேருந்துக்காக காத்திருக்கும் போது, வெயில்,மழை நேரங்களில் இந்த பயணிகள் நிழற்குடையிலே ஒதுங்க வேண்டியுள்ளது.இந்த பயணிகள் நிழற்குடையோ எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே உள்ளார்கள்.
மேலும் இந்த நிழற்குடையை இடித்து விட்டு புதிய நிழற்குடை அமைத்து தரும் படி மாவட்ட ஆட்சியர், ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் இந்த சேதம் அடைந்த பயணிகள் நிழற்குடையை உடனடியாக இடித்து விட்டு புதிய நிழற்குடை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கும் படி சீவலபேரி கிராம மக்கள் சார்பாக வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
வசவப்பபுரம் மு.கணேசன்


