மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கான பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.குழந்தைகள் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என்றால் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தையும் , வலிமையும் அறிந்து கொள்ள குழந்தைகளின் உயரம் மற்றும் எடையை தெரிந்து கொண்டு குழந்தைகளுக்கு அதற்கேற்ப சத்தான உணவுகள் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு, பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை , தேசிய சிறார் நலத்திட்டம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கங்கைகொண்டான் அருகே கலைஞர் காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வைத்து பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை மதர் சமூக சேவை நிறுவனத்தினர் சிறப்பாக செய்தனர்
9442911291 /9894690026


