பேய்குளம் பகுதியில் புதிதாக ஆம்புலன்ஸ் சேவை மற்றும் புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேய்க்குளம் பஜார் பகுதியில் காமராஜர் சமூக நல அறக்கட்டளை சார்பாக முதலுதவி சிகிச்சை உபகரணங்கள் மருத்துவ அலுவலர்கள் அடங்கிய புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் துவக்கி வைத்தார். மேலும், அப்பகுதி பொதுமக்கள் சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
விழாவில் எஸ்பி பேசுகையில், இந்த ஆம்புலன்ஸ் சேவை என்பது மிக முக்கியமானதாகும். இந்த பகுதியில் ஒரு விபத்து ஏற்படும்போது, விபத்தில் அடிப்பட்டவர்களை காலதாமதமின்றி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இந்த ஆம்புலன்ஸ் சேவை பேருதவிதயாக இருக்கும். அதேபோன்று பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது இப்பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளித்து தங்களது குறைகளை இங்கு நிவர்த்தி செய்து கொள்ளாலம். மேலும் தற்போது சிசிடிவி காலத்தின் கட்டாயமாக உள்ளது. சிசிடிவி கேமரா வைப்பதால் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கலாம், மேலும் நடைபெற்ற குற்றங்களை எளிதாகவும் கண்டுபிடிக்கலாம். ஆகவே உங்கள் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நீங்கள் முன்வரவேண்டும்.
மேலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வ ஏற்படுத்தி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை காமராஜர் சமூக நல அறக்கட்டளை சார்பாக கரிக்கோல்ராஜ், மகேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். இவ்விழாவில் சாத்தான்குளம் காவல நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் உட்பட காவல்துறையினர் மற்றும் பேய்க்குளம் வியாபாரிகள் சங்க தலைவர் ஸ்டாலின், ஸ்ரீவெங்கடேசபுரம் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதர் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


