தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் வரலாற்றுத்துறை சார்பாக 75வது இந்திய அரசியலமைப்பு தினம்” குறித்த நிகழ்வுகள் நடைபெற்றன.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் – பள்ளிகளிலிருந்து 157 மாணவியர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் க. சுப்புலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். “இந்திய அரசியலமைப்பு” என்ற தலைப்பில் அமைந்த விழிப்புணர்வு ஒலிஒளி காட்சியை மாணவியர் கண்டு களித்தனர். மாணவியர்களுக்கு இந்திய அரசியல் அமைப்பு குறித்த சிறிய கையேடு ஒன்று வழங்கப்பட்டது.
“இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல் பரிசை புனிதவளன் மகளிர் மேல்நிலைப்பள்ளியும் இரண்டாம் பரிசை மகாத்மா மேல் நிலைப் பள்ளியும் பரிசு பெற்றனர்.
“இந்திய அரசியலமைப்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் முதல் பரிசு தங்கம்மாள் நினைவுப்பள்ளியும் இரண்டாம் பரிசு சுப்பையா வித்யாலையாம் மேல் நிலைப் பள்ளியும் பரிசு பெற்றனர். வரலாற்றுத் துறைத் தலைவர் லோ.சங்கீதா நன்றியுரை நல்கினார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை வரலாற்றுத்துறையினர் செய்திருந்தனர்.


