வல்லநாட்டில் பழமை வாய்ந்த அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் உள்ளது. முப்பீட தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நாளை சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகிறது. இதனை முன்னிட்டுத் தினமும் மாலை 5.30 மணிக்குத் திருவெம்பாவைத் திருவிழா சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் நடைபெறும். திருவிழாவின் நிறைவு நாளான பத்தாம் நாள் இம்மாதம் 20ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் உற்சவர் சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து கோ பூஜையுடன் சிறப்பு ஆரத்தியும் நடைபெறும். அன்று காலை 10 மணிக்கு அருள்மிகு சிவகாமி சமேத நடராஜர் சப்பரம் ரத வீதி உலா நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள வல்லநாடு திருமூலநாதர் பக்தர் பேரவையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


