செய்துங்கநல்லூர் கிராமத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 மற்றும் புதிய வாக்காளர் சேர்த்தல் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கலலூரி மாணவர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர். இந்த பேரணிக்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் செல்வக்குமார் தலைமை வகித்தார்.சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன், சப் இன்ஸ்பெக்டர் காசிராஜன் முன்னிலை விகித்தார். பேரணி கால்நடை ஆஸ்பத்திரி முன்பு துவங்கி போலீஸ் ஸ்டேஷன் வரை நடந்தது ஸ்ரீவைகுண்டம் தேர்தல் துணை வட்டாட்சியர் அய்யனார், செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் மைதிலி சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட ஆசிரியர் ஆறுமுக சேகர், கிராம நிர்வாக அதிகாரி சிவகுருநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேரணியின் போது பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்பு தொடர்பாக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.


