ஆதிச்சநல்லூரில் இந்தியாவிலேயே முதல் முறையாக சைட மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தினை உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகிறார்கள். இந்த இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட அலுவலர்களும் வருகை தருகின்றனர். தூத்துக்குடி மின்சார மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் செயற்பொறியாளர் ராம்குமார், ஸ்ரீவைகுண்டம் உதவி செயற்பொறியாளர் உஷாதேவி, செய்துங்கநல்லூர் உதவி பொறியாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை பார்வையிட்டனர். அவர்களுக்கு ஆய்வு மாணர்கள் விளக்கம் அளித்தனர்.ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை அதிகாரிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பார்வையிட வருவதால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.


