வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும்போட்டி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் இன்று திருநெல்வேலி சரக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும்போட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார் தலைமையில் நடந்தது.
இப்போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சிப்பள்ளி காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தென்காசி மணிமாறன், ஆலங்குளம் பொன்னரசு, சங்கரன்கோவில் சுதீர், புளியங்குடி அசோக், திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார், பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் பிரதீப், திருநெல்வேலி மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆணையர் திருமலை, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் துணை கண்காணிப்பாளர் யோகேஷ் குமார், திருநெல்வேலி ஊரகம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் இன்சாஸ் ரக துப்பாக்கி சுடும் பிரிவுக்கான போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் முதலிடத்தையும், சங்கரன்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் 2வது இடத்தையும், புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அசோக் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
அதே போன்று பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும்போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார் முதலிடத்தையும், சங்கரன்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் 2வது இடத்தையும், திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார் முதலிடத்தையும், சங்கரன்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் 2வது இடத்தையும், திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வாளர் சங்கரலிங்கம் மற்றும் ஆயுதப்படை தலைமைக் காவலர் ராஜா உள்ளிட்ட காவல்துறையினர் செய்திருந்தனர். இந்நிகழ்வின்போது கமாண்டோ படை பிரிவின் காவல் ஆய்வாளர் விவேக் மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.


