தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தைச் சேர்ந்தவர் தானியேல். இவரது மகன் செல்வபிரபு. இவர்கள் இருவருக்கும் சொத்து பிரச்சனை தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் அந்த இடத்தில் உழவு மேற்கொண்டதில் ஏற்பட்ட பிரச்சனையில் இருத்தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் தானியேல், காலேப், செல்வபிரபு, ஏஞ்சல் காயமடைந்தனர்.
இதுகுறித்து தானியேல் மகன்கள் யோசேப்பு (35), காலேப் (27), ஆகியோர் தனித்தனியாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரை உதவி ஆய்வாளர் விஜயகுமார் விசாரணை நடத்தி யோசேப்பு புகாரில் அவரது தந்தை தானியேல், சகோதரர்கள் காலேப், யாக்கோபு, உறவினர் கோயில்ராஜ், ஆகியோர் மீதும், காலேப் புகாரின் பேரில் யோசேப்பு, அவரது மனைவி ஏஞ்சல், செல்வபிரபு ஆகியோர் மீது வழக்கு பதிந்தார். காவல் ஆய்வாளர் பாஸ்கரன் விசாரணை நடத்தி வருகிறார்.


