பசுமை பொருத்திய மலைமுகடுகளும் பள்ளத்தாக்கு களிலும் பரந்து விரிந்த தேயிலை தோட்டங்கள் அதிக மழை பெறும் சிரபுஞ்சிக்கு இணையாக மலை வளம் பெற்ற பூமி மேனியை மட்டும் இன்றி உள்ளத்தையும் சிலிர்க்க வைக்கும் இதமான குளிர்ந்த காற்று பூலோக சொர்க்கமாக திகழும் அடர்ந்த வனப்பகுதியில் மான்கள் துள்ளி விளையாடும் மாஞ் சோலையில் பல தலைமுறைகளாக வாழ்ந்த தொழிலாளர்கள் வாழ்விடத் தை விட்டு விரட்டப்படும் நிலை.
இயற்கை எழில் கொஞ்சும் மாஞ்சோலை வனவிலங்குகளுக்கு மட்டுமின்றி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் வாழ்விடத்தை தந்தது தேயிலைத் தோட்ட நிர்வாகமான பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத் தில் முன்பு ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றிய நிலையில் தற்போது சுமார் 500 பேர் மட்டுமே வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கும் விருப்ப ஓய்வு அளித்து, கணக்கை முடித்து வெளியேற்றும் நடவடிக்கையில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது இதனால் மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிய தொழிலாளர்களின் பனிக்காலம் முடிந்ததால் கண்ணீருடன் விடை பெற்று செல்கின்றனர்.
மாஞ்சோலை நந்தவனத்தில் எளிய குடியிருப்பில் தாயின் வயிற்றில் பிறந்து செழுமை மிக்க மண்ணில் தவழ்ந்து காடுகளில் வானம்பாடிகளாக சுற்றி திரிந்து தேயிலை தோட்டங்களில் ஒரே குடும்பமாக சொற்ப வருமானத்திற்கு பணியாற்றினாலும் தேன்கூட்டில் வசிக்கும் தேனீக்களாக சுறுசுறுப்பாக வாழ்ந்து வந்தனர்.
கடந்த 15ஆம் தேதி கடைசி வேலை நாள் என்று தேயிலைத் தோட்ட நிறுவனம் அறிவித்து தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு நிதியாக 25% தொகையை காசோலையாக வழங்கினர் அதைப் பெற்றுக் கொண்ட பிறகு தான் இனி நமக்கு இங்கு உரிமை இல்லை என்ற உணர்வு ஏற்பட்டதால் தொழிலாளர் கள் கண்ணீர் மல்க ஒருவரை ஒருவர் தேற்ற முடியாமல் வாடினர். பொங்கி எழுந்து அழுகையை அடக்க முடியாமல்தேயிலை தோட்டங் களுக்கு சென்று இயற்கையிடம் மன்றாடினர். பல தலைமுறைகளாக வாழ வைத்த மாஞ்சோலையை மறந்து வாழ்வது எப்படி என்று சோகத்தில் இறுதி நாட்களை எண்ணி வாடுகின்றனர் இதனால் அவர்களை பிரிய மனம் இன்றி மாஞ்சோலையும் கண்ணீர் விடுகிறது.
.மாஞ்சோலையின் வரலாற்றை சற்று புரட்டிப் பார்த்தால் தமிழர்களின் கடும் உழைப்பும் தியாகமும் புலப்படுகிறது.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியானது முன்பு கேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானம் வசம் இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்த்தாண்ட வர்மனுக்கும் எட்டு வீட்டு பிள்ளைமார்க்கும் ஏற்பட்ட தகராறில் மார்த்தாண்ட வர்மனுக்கு உதவி செய்ய சென்றிருந்த சிங்கம்பட்டி ஜமீனின் இளவரசர் மரணம் அடைந்தார்.
உற்ற நேரத்தில் அவர் செய்த உதவியையும் தியாகத்தையும் போற்றும் வகையில் மார்த்தாண் டவர்மன் தற்போது தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதியில் இருக்கும் சுமார் 88 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனுக்கு வழங்கினார். அந்த பகுதி மணிமுத்தாறு அணைக்கட்டில் இருந்து மாஞ்சோலை நாலு முக்கு ஊத்து குதிரை வெட்டி வழியாக கேரளா எல்லை வரை பரந்து விரிந்து உள்ளது.
. அதில் மாஞ்சோலை மலை சாரல் பகுதியை உள்ளடக்கிய 8000 ஏக்கர் நிலத்தை சிங்கம்பட்டி ஜமீன் 99 ஆண்டுகால குத்தகைக்காக கடந்த 12.02.1929 அன்று பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத் திற்கு வழங்கியது தொடர்ந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்றி காடுகளில் தேயிலை தோட்டங்களை உருவாக்கினர் தேயிலை காபி ஏலக்காய் மிளகு போன்றவற்றை பயிரிட்டனர்.
மாஞ்சோலை, நாலு முக்கு, காக்காச்சி, ஊத்து, குதிரை வெட்டி ஆகிய ஐந்து செயலைத் தோட்டங்களை உருவாக்கினார்கள். அங்கேயே தேயிலேயே உலர வைத்து டீத்தூள் தயாரிக்க தொழிற் சாலைகளும் தொடங்கப்பட்டன.
மாஞ்சோலை கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்திலும் நாலு மூக்கு ஊத்து காக்காச்சி தோட்டங்கள் மற்றும் மேல் கோதை ஆறு அணை ஆகியவை மாஞ்சோலையில் இருந்து மேலும் 1000 அடி உயரத்திலும் அமைந்துள்ளன.
டெய்லி தோட்டங்கள் நன்றாக செயல்பட்டு வந்த நிலையில் இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு 1952 ஆம் ஆண்டு ஜமீன் முறை ஒழிப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது தொடர்ந்து 1958 ம் ஆண்டு தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அறிவிப்பின்படி ஜமீன்தார் நிலம் அரசு வசமானதால் 99 ஆண்டுக் கான முந்தைய குத்தகை தமிழ்நாடு அரசுடன் புதுப்பிக் கப்பட்டது.
குத்தகை ஒப்பந்தபடி வருகிற 2025 ஆம் ஆண்டு வரையிலும் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதியை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதியும் வழங்கப் பட்டது பின்னர் 1976 ஆம் ஆண்டு தேயிலை தோட்டங்கள் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு 1978 ஆம் ஆண்டு ஒப்பந்த நிலத்துக்கு பட்டா கேட்டு தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது அப்போதுதான் பிரச்சனையும் எழுந்தது இந்த வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஹை கோர்ட் வழக்கிய தீர்ப்பில் ஒப்பந்த காலம் முடியும் போது நிலத்தை வனத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் 2019 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பிலும் 2018 ஆம் ஆண்டு ஒப்பந்த காலம் முடிவில் 8 ஆயிர மேக்கர் நிலத்தை வனத்துறை வசம் ஒப்படைத்து விட வேண்டும் என்று ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.
அப்போதே மாஞ்சோலையை விட்டு என்றாவது ஒரு நாள் வெளியே செல்ல வேண்டுமோ என்ற அச்சம் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு எழுந்தது எனினும் இன்னும் நாலு ஆண்டுகளில் ஏதேனும் மாற்றம் நிகழாதா என்ற எதிர்பார்ப்பில் ஏங்கி கிடந்தனர்.
இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வை அறிவித்து 25 சதவீத நிவாரண தொகையையும் அளித்து பணிக்காலம் முடிந்ததாக தேயிலைத் தோட்ட நிர்வாகம் அறிவித்தது அனைவருக்கும் பேரிடியாக அமைந்தது.
குத்தகை காலம் முடிவதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கும் நிலையில் இப்போது தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தொடங்கி இருப்பதன் மூலம் மாஞ்சோலை மனித நடமாட்டம் இல்லாத பகுதியாக மாறுவது உறுதியாகிறது.
மணிமுத்தாறு அணையின் நீராதாரமாக திகழும் மாஞ்சோலையில் மக்கள் நடமாட்டம் இல்லை எனில் அணைக்கு இன்னும் சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என்றும் தற்போது உள்ள காடுகள் இன்னும் அடர்ந்த வனமாக மாறும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
(நதி வற்றாமல் ஓடும்)